பீஹாரில் மின்னல் தாக்கி 56 பேர் பலி!
Wednesday, June 22nd, 2016
இந்தியாவில் பீஹார் மாநிலத்தில் மின்னல் தாக்கத்துக்கு உள்ளாகி ஒரேநாளில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
பீஹாரில் தற்போது பருவமழை பெய்ய ஆரம்பித்துள்ளது. இந்நிலையில், நேற்று மாநிலத்தின் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கியதில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் , 8 பேர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தீவிரமடைந்துள்ள இப்பருவமழையால் பீஹாரில் தொடர்ந்து பலி எண்ணிக்கை அதிகரித்து வருகிறதாக பீஹார் மாநில அரசும், வானிலை ஆய்வு மையமும் உறுதிப்படுத்தியுள்ளது.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 4 இலட்சம் ரூபா நிவாரணம் வழங்கப்பட உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.
பீஹார் மட்டுமின்றி உத்திரபிரதேசத்திலும் இடி, மின்னலுக்கு இதுவரை 9 குழந்தைகள் உள்ளிட்ட 13 பேர் பலியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
குஜராத் குல்பர்க் சொசைட்டி கலவரங்களில் ஈடுபட்ட 24 பேர் குற்றவாளிகள் -- நீதிமன்றம் தீர்ப்பு
2050ஆம் ஆண்டில் அதிகமானோருக்கு குடிப்பதற்கு தண்ணீர் கிடைக்காது?
அமெரிக்க அதிபர் சவுதி அரேபியா விஜயம்!
|
|
|


