பீஜிங் ஒலிம்பிக் போட்டியில் 31 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தினர்!
Thursday, May 19th, 2016
சீன தலைநகர் பீஜிங்கில் 2008 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியின் போது 31 வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது தற்போது தெரியவந்துள்ளது.
12 நாடுகளைச் சேர்ந்த இந்த 31 வீரர்களும், ஆகஸ்ட் மாதம் பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறவிருக்கும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.
ஒலிம்பிக் போட்டியின் போது ஊக்க மருந்து சோதனைக்காக வீரர்களிடம் பெறப்படும் மாதிரிகள் பாதுகாக்கப்பட்டு வருவது வழக்கம். அதன்படி பீஜிங் ஒலிம்பிக் போட்டியின்போது வீரர்களிடமிருந்து பெறப்பட்டு 454 மாதிரிகள் அண்மையில், நவீன அறிவியல் சோதனை மூலம் மறு சோதனை செய்யப்பட்டது.
இதில் 31 மாதிரிகளில், வீரர்கள் ஊக்க மருந்து பயன்படுத்தியது கண்டறியப்பட்டது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய சர்வதேச ஒலிம்பிக் சங்கத் தலைவர் தாமஸ் பாச், ஊக்க மருந்து பயன்படுத்தியவர்கள் எங்கும் ஓடி ஒளிய முடியாது. ஏமாற்றுபவர்களுக்கு சரியான தண்டனை கிடைக்கும் என்றார்.
ஊக்க மருந்து பயன்படுத்திய வீரர்கள் குறித்த விவரங்கள் வெளியிடப்படவில்லை. எனினும், அவர்களில் யாரேனும் பதக்கங்கள் வென்றிருந்தால், அவரை பறிமுதல் செய்யப்படும் என ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
மேலும், லண்டன் ஒலிம்பிக் போட்டியின் போது சேகரிக்கப்பட்ட 250 ஊக்க மருந்து மாதிரிகளின் மறு சோதனை குறித்த விவரங்கள் விரைவில் வெளியிடப்படும் என்றும் ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
Related posts:
|
|
|


