பிலிப்பைன்ஸ் தீ விபத்து – 4 பேர் உயிரழப்பு!
Monday, March 19th, 2018
பிலிப்பைன்ஸ் தலைநகரமான மணிலாவில் உள்ள ஓட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் தீயணைப்பு மற்றும் மீட்புக்குழுவினர் ஹெலிஹொப்டர்களுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
கடும் புகை மூட்டத்துக்கு இடையே அங்கு சிக்கி இருந்த சுமார் 300 பேரை அவர்கள் வெளியேற்றினர். இந்த விபத்தில் ஓட்டல் பணியாளர்கள் நான்கு பேர் உயிரிழந்ததாகவும் சுமார் 20 பேர் மூச்சுத்திணறல் மற்றும் தீக்காயங்களுடன் மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Related posts:
குஜராத்தில் பாரிய தீ விபத்து - 19 மாணவர்கள் பலி!
இந்தியாவிலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர் எண்ணிக்கை 31 ஆயிரத்தை தாண்டியது!
கனடாவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை!
|
|
|


