ரோமன் கத்தோலிகம் – அங்கிலிகன் திருச்சபைகள் ஒன்றாக இணைகின்றன!

Thursday, October 6th, 2016

உலகில் நிலவுகின்ற வறுமையினை ஒழிக்கவும், சுற்றுச்சூழலைக் பாதுகாக்கவும் இணைந்து பாடுபடப்போவதாக திருதந்தை  பிரான்ஸ் மற்றும் அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பியும் (Justin Welby) அறிவித்துள்ளனர்.

ரோமன் கத்தோலிக்கத் திருச்சபைத் தலைவர் திருத்தந்தை பிரான்சிஸ், அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் ஜஸ்டின் வெல்பி ஆகியோர் இத்தாலி தலைநகர் ரோமில் சந்தித்துப் பேசியுள்ளனர். அதன்பின் கூட்டறிக்கை வெளியிட்ட அவர்கள் ஏழைகளுக்கு உதவுவதிலும், சுற்றுச்சூழலைக் பாதுகாப்பதிலும் இரு திருச்சபைகளும் இணைந்து செயல்படத் தீர்மானித்துள்ளதாகத் தெரிவித்தனர்.

1534ஆம் ஆண்டுக்குப் பின் இரு சபைகளுக்கிடையிலும் தொடர்பின்றி இருந்த நிலையில் 1966ஆம் ஆண்டு அங்கிலிகன் திருச்சபைத் தலைவர் மைக்கேல் ராம்சே, அப்போதைய திருத்தந்தையான 6 ஆம் போலைச் சந்தித்துப் பேசியது குறிப்பிடத்தக்கது.  உலகம் முழுவதும் அங்கிலிகன் திருச்சபையின் கீழ் எட்டரைக் கோடி பேரும், ரோமன் கத்தோலிக்கத் திருச்சபையின் கீழ் 120 கோடி பேரும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Pope Francis and Archbishop of Canterbury Justin Welby (R) arrive to lead vespers prayers at the monastery church of San Gregorio al Celio in Rome, Italy, October 5, 2016. REUTERS/Tony Gentile

Pope Francis (R) smiles with Archbishop of Canterbury Justin Welby at the end of vespers prayers at the monastery church of San Gregorio al Celio in Rome, Italy,  October 5, 2016. REUTERS/Tony Gentile

Related posts: