பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி ஐநாவுக்கு எச்சரிக்கை!
Sunday, August 21st, 2016
அரசின் போதை மருந்து எதிர்ப்பு பரப்புரையில் சர்வதேச விதிகளுக்கு புறம்பாக நுற்றுக்கணக்கான பேர் கொல்லப்பட்டுள்ளதற்கு பிலிப்பைன்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டோவை ஐநா குற்றஞ்சாட்டியுள்ளதால் ஐக்கிய நாடுகள் அமைப்பிலிருந்து பிலிப்பைன்ஸ் வெளியேற நேரிடும் என பிலிப்பைன்ஸ் ஜனாதிபதி மிரட்டல் விடுத்துள்ளார்.
முட்டாள்தனமான நிறுவனம் என்று அவர் கூறியிருக்கும் ஒரு நிறுவனத்திற்கு செவிமடுக்கும் ஞானத்தை அதிபர் டுடெர்டோ கேள்விக்கு உட்படுத்தியிருக்கிறார். ஐநாவிலிருந்து விலக நேரிடலாம் என்று தெரிவித்திருக்கும் அவர், சீனாவையும், ஆப்பிரிக்க நாடுகளையும் இன்னொரு சர்வதேச அமைப்பை உருவாக்க வரவேற்க நேரிடும் என்று கூறியுள்ளார்.
மே மாதம் அதிபர் டுடெர்டோ தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் காவல்துறையாலும், கண்காணிப் பாளாகளாலும் 800 பேருக்கு மேலானோர் கொல்லப்பட்டுள்ளதாக ஐநா தெரிவித்திருக்கிறது. பஞ்சம், தீவிரவாதப் பிரச்சனைகள் மற்றும் சிரியா, இராக் நாடுகளில் தலையிடுதல் போன்றவை தொடர்பில் ஐநா செயல்படாததையும் அவர் விமர்சித்துள்ளார்.
Related posts:
|
|
|


