பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
Saturday, September 24th, 2016
பிலிப்பைன்ஸ் நாட்டில் தென் பகுதியில் தவாயோ நகரம் உள்ளது. இது பிலிப்பைன்சில் உள்ள பெரிய நகரங்களில் ஒன்று. இங்கு 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர்.இங்கு இன்று அதிகாலை கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. அப்போது பொது மக்கள் அயர்ந்து தூங்கி கொண்டிருந்தனர். அப்போது வீடுகள் குலுங்கிய தால் அலறியடித்து எழுந்து வெளியே ஓட்டம் பிடித்த னர். தெருக்களில் தஞ்சம் புகுந்தனர்.
இங்கு 6.3 ரிக்டரில் நில நடுக்கம் பதிவாகியுள்ளது. பூமிக்கு அடியில் 62 கி.மீட்டர் ஆழத்தில் அது உருவாகி யுள்ளது. நில நடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் பெருமளவில் சேதடைய வில்லை.
உயிரிழப்புகள் மற்றும் காயம் குறித்த தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. நில நடுக்கத்தால் வழக் கத்துக்கு மாறாக அதிக உயரத்துக்கு அலைகள் எழும்பின. இருந்தாலும் சுனாமி எச்சரிக்கை எதுவும் விடவில்லை. பிலிப்பைன்ஸ் பசிபிக் பிராந்தியத்தில் பூகம்ப அபாய பகுதியில் உள்ளது. இதனால் அங்கு அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுகின்றன.
இது போல் ரொமேனியாவிலும் நில நடுக்கம் ஏற்பட்டது அது 5.6 ரிக்டர் அளவில் பதிவாகி உள்ளது. சேதங்கள் குறித்த தகவல்கள் இல்லை.

Related posts:
|
|
|


