புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும்-   ரவுல் காஸ்ட்ரோ

Sunday, July 16th, 2017

புரட்சியை அழிக்கின்ற முயற்சிகள் தோல்வியடையும் என அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப்பை கியூபா ஜனாதிபதி ரவுல் காஸ்ட்ரோ கடுமையாக விமர்சித்துள்ளார்.

கியூபாவின் தேசிய பேரவையில் பேசியபோதே ரவுல் காஸ்ட்ரோ இதனைத் தெரிவித்தார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்இ “இந்த கம்யூனிஸ்ட் தீவு நாட்டோடு மேற்கொள்ளப்பட்டிருந்த அமெரிக்காவின் பயணம் மற்றும் வணிகத்தின் மீது ட்ரம்ப் கட்டுப்பாடுகளை கடுமையாக்கியிருக்கிறார். ஆனால் அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமாவால் திறக்கப்பட்ட ஹவானாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இன்னும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது” என கூறியுள்ளார்.

அரைநூற்றாண்டாக அமெரிக்காவுக்கும் கியூபாவுக்கும் இடையில் நீடித்த கடுமையான மோதல் நிலையினை முன்னாள் ஜனாதிபதி பராக் ஒபாமா தளர்த்தினார். ஆனால் தற்போதைய ஜனாதிபதி தளர்த்தப்பட்டவற்றில் சில அம்சங்களைஇ ஒரு மாதத்திற்கு முன்பு மீள பெற்றார்.

ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்த கொள்கை மாற்றங்களினால் இருநாடுகளுக்குமிடையில் சமீபகாலமாக நீடித்துவந்த சுமூக உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

Related posts: