பிலிப்பைன்ஸில் குண்டு வெடிப்பில் 12 பேர் பலி!
Saturday, September 3rd, 2016
பிலிப்பைன்ஸின் தெற்கே அமைந்துள்ள தவோ நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பில் 12 பலியாகினர்.
சம்வத்தில் மேலும் 60 பேர் வரையில் காயமடைந்தனர். குறித்த பகுதியில் இரவு நேர சந்தையில் மக்கள் கூடியிருந்த வேளையிலேயே இந்த குண்டு வெடிப்பு இடம்பெற்றதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இதனை தொடர்ந்து காவற்துறையினர் குறித்த பகுதியில் தேடுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்த குண்டு வெடிப்புடன் தொடர்புடையாவர்கள் எவராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவதோடு, இவ்வாறான சந்தர்ப்பங்களில் மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் பிலிப்பையின்ஸ் அதிபர், அந்த நாட்டு மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts:
முடிவுக்கு வருகிறது கியூப மக்களுக்கான அமெரிக்காவின் விசா தொடர்பான சலுகை!
இராணுவ ரோந்து பணியில் டோனி!
யுக்ரைனில் தேசத்துரோகம் - உயரதிகாரிகளை பதவி நீக்கம் செய்தார் ஜனாதிபதி வொலோடிமிர் ஸெலென்ஸ்கி!
|
|
|


