பிலிப்பின்ஸ் அதிபர் டுடெர்டேவுக்கு எதிராக செனட்டர்!

Monday, December 19th, 2016

பிலிப்பின்ஸ் அதிபர் ரொட்ரிகோ டுடெர்டே மீது குற்றஞ்சாட்டி பதவி இறக்க வேண்டி அழைப்பு விடுத்துள்ள பெண் செனட்டர் ஒருவர், தன்னுடைய உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றும், ஆனால் அதற்காக தான் அமைதியாக இருக்கப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.

பிலிப்பின்ஸின் முன்னாள் நீதித்துறை அமைச்சரான லைலா டெ லிமா, போதை மருத்துக்கு எதிரான அதிபரின் போரை விமர்சிக்கத் தொடங்கியதிலிருந்து கூடுதல் பாதுகாப்பை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

கடந்தவாரம், தன் கையால் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்பட்ட மூவரை கொலை செய்திருப்பதாக அதிபர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து லைலா டெ லிமா, அதிபர் மீது குற்றஞ்சாட்டி பதவியிறக்கும் நடைமுறைக்கு அழைப்பு விடுத்துள்ளார்.

பிலிப்பின்ஸில் அதிபரின் போதை எதிர்ப்பு பிரசாரத்திற்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் முன்னணி அரசியல்வாதிகளில் லைலாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

_93018732_gettyimages-621624516

Related posts: