பிரேஸில் சிறை மோதல் சம்பவத்தில் 25 கைதிகள் கொலை!

வடக்கு பிரேஸிலில் அதிக நெரிசல் கொண்ட சிறை ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் நேற்று முன்தினம் ஏற்பட்ட மோதலில் 25 கைதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.இதில் ஏழு பேர் தலை துண்டித்தும், அறுவர் தீவைத்தும் கொல்லப்பட்டள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன..
ரொரைமா மாநில தலைநகரான போ விஸ்டாவில் உள்ள சிறையில் வெளியாட்கள் பார்க்கவரும் நேரத்திலேயே இந்த மோதல் ஏற்பட்டுள்ளது.
இதன்போது கைதிகளை பார்க்கவந்த சுமார் 100 பேர் வரை பிணைக்கைதிகளாக பிடித்துவைக்கப்பட்டிருந்ததோடு கலவரம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை அடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
சிறைச்சாலையின் மற்றொரு பகுதிக்குள் கைதிகள் நுழைய முற்பட்டபோதே மோதல் ஏற்பட்டுள்ளது. கைதிகள் கத்தி, பொல்லுகளுடன் மோதலில் ஈடுபட்டதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். 740 பேருக்கு மாத்திரமே இடவசதி இருக்கும் இந்த சிறையில் 1,400 கைதிகள் வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சுமார் 600,000 கைதிகள் இருக்கும் பிரேஸில், உலகில் நான்காவது அதிக கைதிகள் இருக்கும் நாடாகும்.
நாடெங்கும் இருக்கும் போதிய வசதி இல்லாத மற்றும் அதிக நெரிசல் கொண்ட சிறைகள் குற்ற கும்பல்கள் இயங்குவதற்கு வாய்ப்பாக இருப்பதாக அவதானிகள் குறிப்பிடுகின்றனர்.
Related posts:
|
|