பிரேசில் முன்னாள் அதிபர் மீது ஊழல் குற்றச்சாட்டு பதிவு!

பிரேசில் முன்னாள் அதிபர் லூலா டா சில்வா மற்றும் அவர் மனைவி மீது ஊழல் மற்றும் பண மோசடி குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
தனது தொழிலாளர்கள் கட்சி, அரசில் நிலைபெறுவதை நோக்கமாக கொண்டு பிரேசிலின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனமான பெட்ரோபராஸ் நிறுவனத்தில் நடந்த ஊழலில் சம்பந்தப்பட்ட முக்கிய நபர் லூலா டா சில்வா தான் என்று அரசு வழக்கறிஞரான டெல்டான் டாலாக்நோல் தெரிவித்துள்ளார்.
இதனால், அந்நிறுவனம் 12 பில்லியன் டாலர்களுக்கும் அதிகமான பண இழப்பினை சந்தித்துள்ளது என்று அவர் மேலும் தெரிவித்தார்.முன்னாள் அதிபர் லூலா டா சில்வாவின் வழக்கறிஞர்கள், இக்குற்றச்சாட்டுக்களுக்கு எந்த அடிப்படையும் இல்லை என்று கூறியுள்ளனர்.
Related posts:
அமெரிக்கா மீது துருக்கி ஜனாதிபதி குற்றச்சாட்டு !
தாய்லாந்தில் பொதுத் தேர்தல் திகதி அறிவிப்பு!
சிரியாவிலுள்ள தனியார் மருத்துவமனை மீது பயங்கரவாத தாக்குதல்! 13 பேர் பலி
|
|