இந்தியப் பிரமரை கடுமையாக விமர்சித்த பாகிஸ்தான் பிரதமர்!

Saturday, August 31st, 2019

சர்ச்சைக்குரிய காஷ்மீர் பிராந்தியத்தில் மனித உரிமை மீறல்களிலிருந்து கவனத்தைத் திசைதிருப்ப பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீர் மீது இந்தியா தாக்குதல் நடத்தலாம் என்று சர்வதேச சமூகத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத்தில் நடந்த பேரணியில் உரையாற்றிய இம்ரான் கான், பாகிஸ்தானைத் தாக்கினால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் அரசாங்கத்திற்கு தனது நாடு தகுந்த பதிலடி அளிக்கும் என்று கூறினார்.

மோடியை பாசிசவாதி என்று வர்ணித்து, அவரை ஹிட்லருடன் ஒப்பிட்ட இம்ரான் கான், காஷ்மீரில் முஸ்லிம்கள் இனப்படுகொலை செய்யப்படுவார்கள் என தான் அஞ்சுவதாகக் கூறினார்.

காஷ்மீரில் முஸ்லிம்களுக்கு ஆதரவான இதேபோன்ற பேரணிகள் பாகிஸ்தான் முழுவதும் வெள்ளிக்கிழமை ஆகத்து 30ம் திகதி நடைபெற்றது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை இந்திய ரத்து செய்ததை தொடர்ந்து ஆகத்து 5 முதலே பாகிஸ்தானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பதட்டங்கள் அதிகரித்துள்ளன.

Related posts: