பிரெக்ஸிட் தொடர்பான வரைவு மசோதாவை வெளியிட்டது பிரித்தானிய அரசு!
Friday, January 27th, 2017
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கான அதிகாரப்பூர்வ நடவடிக்கைகளை தொடங்குவதற்கு நாடாளுமன்றத்தின் ஒப்புதல் கோரும் வரைவு மசோதா ஒன்றை பிரித்தானிய அரசு வெளியிட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் முடிவெடுக்க நாடாளுமன்றத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது, அரசாங்கத்துக்கு இல்லை இல்லை என்று கடந்த செவ்வாய்கிழமையன்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இதற்கிடையே, ஐரோப்பிய நாடாளுமன்றத்தை சேர்ந்த நெதர்லாந்து நாட்டு உறுப்பினர் ஒருவர், ஐக்கிய ராஜ்ஜியத்தில் தொடர்ந்து தங்க நினைக்கும் ஐரோப்பிய ஒன்றிய பிரஜைகளுக்கு ராஜிய தடைகளை பிரிட்டன் அரசாங்கம் விதிப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளார். அப்படிப்பட்ட மக்களின் நிலை மாறாது என்று பிரிட்டன் தெரிவித்துள்ளது

Related posts:
சீனாவில் களை கட்டிய சர்வதேச உலங்கு வானூர்தி கண்காட்சி!
டொனால்ட் டிரம்ப் - நரேந்திர மோடி சந்திப்பு!
பெல்ஜியத்தில் தடுத்துவைக்கப் பட்டுள்ள கப்பலில் மூவர் மரணம்!
|
|
|


