பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை எட்டப்படும் – டேவிட் டேவிஸ்!
Tuesday, June 27th, 2017
பிரெக்சிற் தொடர்பில் சிறந்த உடன்படிக்கை ஒன்று எட்டப்படும் என பிரித்தானியாவின் பிரெக்சிற் செயற்பாடுகளுக்கு பொறுப்பான அமைச்சர் டேவிட் டேவிஸ் தெரிவித்துள்ளார்.
மேலும் “சிறந்த பிரெக்சிற் உடன்படிக்கை ஒன்று ஏற்படுத்தப்படும் என்பது தொடர்பில் நான் முழு நம்பிக்கை கொண்டுள்ளேன். எனினும் அதை 100 சதவீதம் உறுதியாக கூற முடியாது. ஆயினும் சிறந்த முறையில் பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு உடன்படிக்கை ஒன்று எட்டப்படும். அது தொடர்பில் எவ்வித சந்தேகமும் கொள்ள வேண்டாம்” என தெரிவித்தார்.
பிரித்தானியாவில் உள்ள ஐரோப்பிய ஒன்றியப் பிரஜைகள் பிரெக்சிற்றின் பின்னரும் வசிக்கலாம் எனவும் சுகாதாரம் கல்வி மற்றும் ஏனைய சலுகைகளை அனுபவிக்கலாம் எனவும் அண்மையில் பிரதமர் மே தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
Related posts:
எகிப்துஎயார் விமான அனர்த்தத்திற்கு ஒரு மணித்தியாலம் முன் மர்மமான பொருள் எமது விமானத்துக்கு மேலாக பறந...
முதல்வர் ஜெயலலிதாவிற்கு செயற்கை சுவாசம்! அறிக்கை வெளியிட்ட அப்பலோ!!
பிரான்ஸ் அதிபர் தேர்தல் வேட்பாளரின் மனைவி மீது விசாரணை!
|
|
|


