எகிப்துஎயார் விமான அனர்த்தத்திற்கு ஒரு மணித்தியாலம் முன் மர்மமான பொருள் எமது விமானத்துக்கு மேலாக பறந்தது – இரு துருக்கிய விமானசேவை விமானிகள் ?

Wednesday, May 25th, 2016

எகிப்­து­எயார் விமானம் மத்­தி­ய­த­ரைக்­க­டலில் விழு­வ­தற்கு ஒரு மணித் ­தி­யா­லத்­துக்கு முன்னர் தமது விமா­னத்­துக்கு மேலாக என்­ன வென்று அறி­யப்­ப­டாத மர்­ம­மான பொருள் பறந்­த­தாக இரு துருக்­கிய விமா­ன­ சேவை விமா­னிகள் உரி­மை­கோ­ரி­யுள்­ளனர்

மேற்­படி எயார்பஸ் ஏ320 விமானம் கடந்த வியா­ழக்­கி­ழமை பிரான்ஸின் பாரிஸ் நக­ரி­லி­ருந்து எகிப்திய கெய்ரோ நக­ருக்கு பய­ணித்த வேளை மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­ததில் அதில் பயணம் செய்த 66 பேரும் உயி­ரி­ழந்­தி­ருந்­தனர்.

அந்த விமானம் எதனால் இவ்­வாறு மத்­தி­ய­தரைக் கடலில் விழுந்­தது என்­பது அறி­யப்­ப­டாத மர்மமா­கவே தொடர்ந்து உள்­ளது.

இந்­நி­லையில் அன்­றைய தினம் தமது பய­ணிகள் விமானம் இஸ்­தான்புல் நக­ரி­லுள்ள அதாதுர்க் விமான நிலை­யத்தை அண்­மித்த வேளை தமது விமா­னத்­துக்கு மேல் 2,000 அடி­யி­லி­ருந்து 3,000 அடி உய­ரத்தில் மர்­ம­மான பொருள் பச்சை நிற ஒளியுடன் பய­ணித்­த­தாக குறிப்­பிட்ட இரு விமானிகளும் விமானக் கட்­டுப்­பாட்டுப் பிரி­வுக்கு தெரி­வித்­துள்­ள­தாக துருக்­கியின் மிகப் பெரிய செய்தி நிறு­வ­ன­மான ஹரியத் டெய்லி நியூஸ் செய்தி வெளி­யிட்­டுள்­ளது.

அந்தப் பொருள் திடீ­ரென தோன்றி திடீ­ரென மறைந்­த­தாக அந்த விமா­னிகள் கூறி­யுள்­ளனர்.அந்தப் பய­ணிகள் விமானம் துருக்­கிய தலை­ந­க­ரி­லுள்ள சிலிவ்றி பிராந்­தி­யத்தை நெருங்­கிய வேளையிலேயே இந்தச் சம்­பவம் இடம்­பெற்­றுள்­ள­தாகத் தெரி­விக்­கப்­ப­டு­கிறது.

எகிப்­து­எயார் விமானம் இந்தச் சம்­பவம் இடம்­பெற்று ஒரு மணித்­தி­யா­லத்­திற்குப் பின்னர் அந்த இடத்­தி­லி­ருந்து சுமார் 500 மைல் தொலைவில் கடலில் விழுந்­துள்­ளது

இந்­நி­லையில் துருக்­கிய விமா­னிகள் தெரி­வித்­துள்ள விபரம் தொடர்பில் அந்­நாட்டு விமான அதிகார சபையின் பணிப்­பாளர் நாயகம் கூறு­கையில், ராடர் கரு­வியில் எதுவும் தென்­பட்­டி­ரு க்குமானால் அதன் அடிப்­ப­டையில் அந்த விமா­னிகள் எதனை அவ­தா­னித்­துள்­ளார்கள் என்­பதைக் கூறக் கூடி­ய­தா­க­வி­ருக்கும் எனத் தெரி­வித்தார்.

எகிப்­து­ எயார் கடலில் விழு­வ­தற்கு முன்னர் விமா­னத்தில் பர­விய தீயை அணைப்­ப­தற்­காக அந்த விமா­னத்தை அவ­ச­ர­கால நிலை­மையின் கீழ் தரை­யி­றக்க அதன் விமா­னி­யான செய்த் அலி ஷுகைர் விமானக் கட்­டுப்­பாட்டுப் பிரிவைக் கோரி­யி­ருந்­த­தாக பிரான்ஸ் விமான சேவை வட்டாரங்கள் தெரி­வித்­தி­ருந்த நிலையில் இந்த மர்­ம­மான பொருள் தொடர்­பான தகவல் வெளியாகி­யுள்­ளமை குறிப்­பி­டத்­தக்­கது.

அந்த விமான அனர்த்­தத்­திற்கு முன்னர் செய்த் அலி ஷுகை­ருக்கும் விமான கட்­டுப்­பாட்டு அதிகாரிகளுக்­கு­மி­டையே பல நிமிட நேர உரை­யாடல் இடம்­பெற்­றி­ருந்­த­தாக பிரான்ஸ் எம்6 தொலைக்காட்சி சேவை செய்தி வெளியிட்டிருந்தது.

ஆனால் இது தொடர்பில் எகிப்து எயார் விமான சேவை மறுப்புத் தெரிவித்துள்ளது அந்தச் சம்பவத்துக்கு முன்னர் விமானி விமானக் கட்டுப்பாட்டுப் பிரிவை தொடர்பு கொள்ளவில்லை என அது வலியுறுத்தியுள்ளது.

Related posts: