பிரித்தானிய வெளியேற்றத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆதரவு !

Thursday, April 6th, 2017

ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் திட்டத்திற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. இது தொடர்பில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு 516 க்கு 133 என்ற வாக்குகளின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவது தொடர்பான பேச்சுவார்த்தையில் ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேரடியாக பங்குபெற மாட்டார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் இறுதி உடன்படிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆதரவாக வாக்களிக்க வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தமது நாட்டுக்கு சாத்தியமில்லாத நிபந்தனைகளை விதிப்பதற்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் முயற்சிப்பதாக பிரித்தானிய சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நைய்ஜல் பெராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன் ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாஃபியா எனவும் அவர் விமர்சித்துள்ளார்.

இந்த நிலையில் ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானிய வெளியேறும் பிரேரணைக்கு ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.

பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான இரண்டு வருட பேச்சுவார்த்தைக்கான பொது விதிமுறைகள் குறித்த பிரேரணையில் உள்ளடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: