பிரித்தானிய அரசியல் – பதவி விலக தயாராகும் பிரதமர் தெரேசா மே?

Thursday, March 28th, 2019

பிரதமர் பதவியை துறக்க தான் தயாராக இருப்பதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மே அறிவித்துள்ளார். இந்நிலையில், பிரித்தானியா அரசியல் களம் பரபரப்படைந்துள்ளது.

தமது Brexit உடன்படிக்கையானது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தாம் பிரதமர் பதவியிலிருந்து விலக தயார் என தெரேசா மே அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தொடர்பான Brexit நடவடிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே கொண்டு வந்த உடன்படிக்கை பிரித்தானிய பாராளுமன்றத்தில் இரண்டு முறை தோற்கடிக்கப்பட்டது.

இதன்படி, Brexit நடவடிக்கை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் தெரசா மே ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஏற்படுத்திய உடன்படிக்கையை அந்நாட்டு பாராளுமன்றம் நிராகரித்துள்ளது.

அத்துடன் ஒப்பந்தம் இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் திட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் புதிய ஒப்பந்தத்தை ஏற்படுத்துமாறு வலியுறுத்தி வந்தனர்.

எனினும் ஐரோப்பிய ஒன்றியம் புதிய ஒப்பந்தத்துக்கு வாய்ப்பு இல்லை என தெரிவித்துள்ளது. இதனால் ஒப்பந்தம் இல்லா Brexit தொடர்பாக மார்ச் 12ஆம் திகதி பாராளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தப்படும் என தெரசா மே தெரிவித்திருந்தார்.

எனினும், குறித்த வாக்கெடுப்பு நடைபெற்ற நிலையில் பிரித்தானிய பாராளுமன்றத்தில் தெரசா மே கொண்டு வந்த தீர்மானம் இரண்டாவது முறையாக நிராகரிக்கப்பட்டது.

இந்நிலையில், தமது Brexit உடன்படிக்கையானது பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்டால் தாம் பிரதமர் பதவியிலிருந்து விலக தயார் என தெரேசா மே தற்போது அறிவித்துள்ளார்.

இது குறித்து சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ள செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரெக்சிற் தொடர்பான அடுத்தகட்ட கலந்தாலோசனைகளில் தாம் கலந்துகொள்ளும் வாய்ப்பு அமையாது என தெரேசா மே தெரிவித்ததாகவும் கூறப்படுகிறது.

தெரேசா மேவின் இந்த முடிவு பிரெக்சிற் தொடர்பான தமது முயற்சிக்கு பலன் தரும் என அவர் நம்புவதாக தெரியவந்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா மார்ச் மாதம் 29 ஆம் திகதி வெளியேற வேண்டும்.

எனினும் இருமுறை பிரித்தானிய பாராளுமன்றத்தால் தமது ஒப்பந்தமானது நிராகரிக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய தலைவர்கள் பிரித்தானியா வெளியேறும் கால அவகாசத்தை நீட்டித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: