பிரித்தானியா விலகி நிற்க வேண்டும் – ஜெரமி!

Tuesday, August 15th, 2017

 

வடகொரியாவிற்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் பங்குபெறுவது தொடர்பில் பிரதமர் தெரேசா மேயின் அரசாங்கத்தை தொழிலாளர் கட்சியின் தலைவர் ஜெரமி கோர்பின் எச்சரித்துள்ளார்.

பிரித்தானிய ஊடகமொன்றுக்கு எழுதிய கட்டுரையொன்றிலேயே அவர் இவ்வாறு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அதில் மேலும் குறிப்பிட்டுள்ள அவர், முழு உலகின் பாதுகாப்பை கருத்திற்கொண்டு வடகொரியாவுடனான பேச்சுவார்த்தைக்கே அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும்.

கொரிய நெருக்கடியை எதிர்கொள்ள கூட்டு பயிற்சியிலோ அல்லது இராணுவ நடவடிக்கைகளிலோ ஈடுபடக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.

வடகொரிய நெருக்கடிக்கு இராஜதந்திர தீர்வை எட்டுவதற்கு லண்டன் வொஷிங்டனுடன் இணைந்து செயற்படுவதாக வெளியுறவுத்துறை அமைச்சர் போரிஸ் ஜொன்சன் கருத்து வெளியிட்டிருந்த நிலையிலேயே ஜெரமி கோர்பின் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

Related posts: