ஈரான் அதிபர் தேர்தல் மீண்டும் வென்றார் ஹசான் ரவுஹானி

Tuesday, May 23rd, 2017

ஈரான் அதிபர் பதவிக்கு நடைபெற்ற தேர்தலில் தற்போதைய அதிபர் ஹசான் ரவுஹானி இரண்டாவது முறையாக மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்.

ஈரான் நாட்டு அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்றது. இதில் தற்போதைய அதிபர் ஹசான் ரவுஹானியை எதிர்த்து இப்ராஹிம் ரைசி போட்டியிட்டார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவியது.

இத்தேர்தலில் வாக்களிக்க தகுதி பெற்ற 56 மில்லியன் வாக்காளர்களில் 40 மில்லியன் பேர் வாக்குப்பதிவு செய்திருந்தனர். பதிவான மொத்த வாக்குகளில் 23.5 மில்லியன் வாக்குகளைப் பெற்ற அதிபர் ஹசான் ரவுஹானி, இரண்டாவது முறையாக ஆட்சியைக் கைப்பற்றினார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட இப்ராஹிம் ரைசிக்கு15.8 மில்லியன் வாக்குகள் கிடைத்திருந்தன.

இது தொட்ரபாக அதிபர் ஹசான் ரவுஹானி  தேசிய தொலைக்காட்சியில் உரியாற்றியபோது ஈரான் தேசம் உலகத்தில் அமைதியுடனும் நட்புடனும் வாழ்வதையே இந்த தேர்தல் முடிவு காட்டுகிறது. நாட்டின் நலன் கருதி உலகின் அனைத்து நாடுகளுடனும் நட்புறவு கொள்ளவே ஈரான் விரும்புகிறது ஆனால் அவமானங்களையும்  அச்சுறுத்தல்களையும் எமது நாடு ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது’  என்றார்.

நாட்டு மககள் வழங்கிய தேர்தல் தீர்ப்பினை ஏற்றுக் கொள்வதாகவும் மீண்டும் வெற்றி பெற்றுள்ள அதிபர் ஹசான் ரவுஹானிக்கு தமது வாழ்த்துகளை தெரிவிபதாகவும்  தேர்தலில்  தோல்வி அடைந்த இபராஹிம் ரைசி  கூறியுள்ளார்.

Related posts: