பிரித்தானியாவில் வெற்றி பெற்ற இலங்கை தமிழ் பெண்!
Monday, June 12th, 2017
பிரித்தானியாவில் நடைபெற்ற முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் இலங்கை வம்சாவளி பெண்ணொருவர் பாரிய வெற்றியை பெற்றுள்ளார்.
தொழிற்கட்சி சார்பில் பிரிஸ்டல் மேற்குத் தொகுதியில் போட்டியிட்ட தங்கம் டெபோனயர் என்ற இலங்கைப் பெண்ணே வெற்றி பெற்றுள்ளளார். இவர் 47213 வாக்குகளைப் பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட கன்சர்வேட்டிவ் கட்சி வேட்பாளர் 9877 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தார்.
தங்கம் டெபோனயர் இலங்கைத் தமிழ் வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஆவார். தங்கம் டெபோனயரின் தந்தை ஒரு இலங்கைத் தமிழர். அவரது தாயார் பிரித்தானிய வெள்ளையின பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது
Related posts:
ஒரு இலட்சம் அகதிகளை தாய்நாட்டிற்கு திருப்பி அனுப்ப முடிவு!
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் புஷ் வைத்தியசாலையில் அனுமதி!
இலங்கைக்கு சுற்றுலாப் பயணங்களை மேற்கொள்ள வேண்டாம் – நாட்டு மக்களுக்கு சீனா எச்சரிக்கை!
|
|
|


