பிரித்தானியாவில் பாரிய காட்டுத் தீ விபத்து!
Wednesday, June 27th, 2018
பிரித்தானியாவின் சற்றில்வேர்த் மூர் பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீ காரணமாக சுமார் 34 வீடுகளில் இருந்து மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெப்பமான காலநிலை காரணமாக கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு பரவத் தொடங்கிய இந்தக் காட்டுத்தீயானது தொடர்ந்தும் பல பகுதிகளுக்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கார்புரூக் பகுதியிலுள்ள 34 வீடுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அங்குள்ள மக்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் தீ பரவி வருவதுடன் 20 மைல் மைல் தூரத்திற்கு புகை பரவியுள்ளதாகவும் தீயினைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் இராணுவத்தினர் உதவிக்கு நிறுத்தப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
Related posts:
100 டொலர் நோட்டுகளை திரும்பப் பெற அவுஸ்திரேலியா முடிவு?
திருநங்கைகள் பணியாற்ற முடியாது - ட்ரம்ப் !
ஈரான் நடத்தியுள்ள தாக்குதல் நிலை மிகவும் அபாயகரமானது – இஸ்ரேல் பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பா...
|
|
|


