திருநங்கைகள் பணியாற்ற முடியாது – ட்ரம்ப் !

Friday, July 28th, 2017

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் பணியாற்ற முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் மேற்படி தடை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ள ட்ரம்ப், ‘ அமெரிக்க இராணுவ சேவையில் எந்தவொரு பதவியிலும் திருநங்கைகள் பணியாற்றுவதை ஏற்றுக் கொள்ளவோ அனுமதிக்கவோ முடியாதுஎனவும் குறிப்பிட்டுள்ளார்.

எமது இராணுவத்தின் சேவைகள் தீர்க்கமான மற்றும் அதிகமான வெற்றி தொடர்பிலேயே அவதானம் செலுத்த வேண்டும். அதைவிடுத்து  இராணுவத்திலுள்ள திருநங்கைகளுக்கு ஏற்படும் இடையூறுகளால் மிகப்பெரிய மருத்துவச் செலவுகள் பாதிக்கப்பட கூடாதுஎன்றும் குறிப்பிட்டுள்ளார். மனித உரிமைக் குழுக்கள் மத்தியில் பெரும் விமர்சனத்தை தூண்டியுள்ள ஜனாதிபதி ட்ரம்பின் அறிவிப்பினை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பில் வெள்ளை மாளிகை ஆலோசித்து வருகின்றது.

அமெரிக்க இராணுவத்தில் திருநங்கைகள் வெளிப்படையாக சேவை செய்வதற்கு அனுமதிக்க கடந்த 2016 ஆம் ஆண்டு ஒபாமா தலைமையிலான நிர்வாகம் தீர்மானித்திருந்த நிலையில், ஆறுமாதகால தாமதத்திற்கு பின்னர் 2016 ஆம் ஆண்டு ஜூன் மாதம் திருநங்கைகளை பணியில் சேர்ப்பதற்கு பாதுகாப்பு செயலாளர் ஜேம்ஸ் மாட்டிஸ் ஒப்புதல் அளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts: