காஷ்மீர் விவகாரம் : ஐ.நா.சபையில் ஆலோசனை!

Saturday, August 17th, 2019

காஷ்மீர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியதை அடுத்து ஐ.நா.சபையில் ஆலோசனை நடத்தப்பட்டுள்ளதாக சரவதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

காஷ்மீர் மாநிலத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டிருப்பதுடன் அந்த மாநிலம் 2 ஆக பிரிக்கப்பட்டு யூனியன் பிரதேசங்களாக மாற்றப்பட்டுள்ளன.

காஷ்மீர் விவகாரத்தை ஐ.நா. பாதுகாப்பு சபை அவசரமாக விவாதிக்க வேண்டும் என்று பாகிஸ்தான் கடிதம் கொடுத்ததுடன் பாதுகாப்பு சபை உறுப்பு நாடான சீனாவும், காஷ்மீர் விவகாரம் குறித்து ஐ.நா. பாதுகாப்பு சபையில் விவாதிக்க வேண்டும் என்று வற்புறுத்தி உள்ளது.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா, பிரான்சு, ரஷியா, இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்தியாவுக்கு சாதகமான நிலையை எடுத்துள்ளன. எனவே பாதுகாப்பு சபையில் விவாதம் நடத்துவதற்கு அந்த நாடுகள் சம்மதிக்காது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

விவாதம் நடைபெறும் பட்சத்தில் உறுப்பு நாடுகளிடம் வாக்கெடுப்பு நடத்தப்பட்டு அதன்பிறகு ஐ.நா. சபை முடிவுகள் எடுக்கும் என தெரிவிக்கப்படுகின்றன

Related posts: