பிரித்தானியாவில் இனசமத்துவமின்மை அதிரிப்பு!
Friday, August 19th, 2016
பிரித்தானியாவிலுள்ள சிறுபான்மையினர் தற்போதும் பாரிய அளவில் இன சமத்துவமின்மையை எதிர்நோக்கியுள்ளதாக கண்காணிப்பு அமைப்பொன்று எச்சரித்துள்ளது.
கல்வி சுகாதாரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்களில் இந்த நிலைமை காணப்படுவதாக சமத்துவம் மற்றும் மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. வேலைவாய்ப்பின்மை, வீடமைப்பு, சம்பளம் மற்றும் குற்றவியலுக்கான நீதி தொடர்பில் ஆராயும் குறித்த ஆணைக்குழு, இன சமத்துவமின்மை தொடர்பில் எச்சரிக்கை செய்துள்ளது.
வெள்ளையினத்தவர்கள் பெறும் சம்பளத்தை விட 23 தசம் 1 வீதம் குறைவாகவே கறுப்பின பட்டதாரிகள் பெறுவதுடன், பல சிறுபான்மையினர் வேலை வாய்ப்பற்று இருக்கின்றமை கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் உண்மையான சமூக மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உறுதியுடன் உள்ளதாக பிரித்தானிய அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா வெளியேற தீர்மானத்த பின்னர், வெறுப்புணர்வு குற்றங்கள் மற்றும் நீண்டகால நியாயமற்ற, இன சமத்துவமின்மை அதிகரித்துள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் டேவிட் இஷாக் கூறியுள்ளார்.
இன சமத்துவமின்மையை ஒழிப்பதற்கான முயற்சிகளை உடனடியாக இரட்டிப்பாக்க வேண்டும் எனவும் அல்லாவிடின் சமூகத்திற்கு இடையிலான வேறுபாடுகள் மற்றும் கடும்போக்குவாத பதற்றம் அதிகரிக்கும் ஆபத்து காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
Related posts:
|
|
|


