பிரித்தானியாவிற்கு விஜயம் செய்யவுள்ளார் அமெரிக்க ஜனாதிபதி!

எதிர்வரும் ஜுலை மாதம் 13ஆம் திகதி அமெரிக்காவின் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானியாவிற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
இந்த விஜயத்தை அவர் ஏற்கனவே மேற்கொள்ளவிருந்த போதும், அவருக்கு எதிராக நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களால் அந்த திட்டம் கைவிடப்பட்டது. தற்போது அவர் மீண்டும் அங்கு பயணம் செய்வதற்கான அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
ஆனால் இந்த விஜயமானது, முன்னதாக பிரித்தானிய பிரதமர் தெரேசா மேய் அமெரிக்கா சென்றிருந்த போது உறுதியளிக்கப்பட்ட முழுமையான ராஜதந்திர விஜயமாக இருக்காது என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த விஜயத்தின் போது டொனால்ட் ட்ரம்ப் பிரித்தானிய மஹாராணியாரையும், பிரதமரையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்துவார்.
Related posts:
இஸ்லாமியர்களின் தாயகமாக மாறும் ஜேர்மனி!
பாகிஸ்தானுக்கு விஜயம் மேற்கொண்ட மலாலா!
மனித கடத்தலை முறியடிக்க இலங்கைக்கு உலங்குவானூர்தி வழங்கும் இத்தாலி!
|
|