பிரித்தானியாவின் வெளியேற்றம் ஐரோப்பாவை பலவீனமாக்கியுள்ளது – அர்காடி வோர்கோவிச்!
Saturday, September 3rd, 2016
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேற பிரித்தானிய மக்கள் வாக்களித்தது ஐரோப்பாவை பலவீனமடைய செய்திருக்கிறது என்று ரஷியாவின் துணை பிரதமர் அர்காடி வோர்கோவிச் தெரிவித்துள்ளார்.
ஜூன் மாதம் வெளிவந்த மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்
ஐரோப்பிய ஒற்றுமையை பலவீனப்படுத்த விரும்பி ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேறுவதற்கு ஆதரவளித்தார் என்ற கூற்றை அவர் மறுத்திருக்கிறார்.
பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு படிப்படியாக வெளியேறுவதால் உக்ரைனில் ரஷ்யா தலையிட்டதை தொடர்ந்து ரஷ்யா மீது விதிக்கப்பட்ட தடைகள் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்தின் நிலைப்பாட்டில் பெரிய மாற்றங்கள் ஏற்படாது என்று அவர் கூறியிருக்கிறார்.

Related posts:
அழித்து விடுவோம் - தென் கொரியாவை மிரட்டும் வடகொரியா!
டோக்கியோவின் முதல் பெண் ஆளுநர் Yuriko Koike!
பிலிப்பைன்ஸில் நிலநடுக்கம்!
|
|
|


