பிரான்ஸில் பொலிஸாருடன் சண்டை செய்த குத்துச் சண்டை வீரர் கிறிஸ்டோப்!

Wednesday, January 9th, 2019

பிரான்ஸில் எரிபொருள் விலை உயர்வடைந்தமை தொடர்பில் அங்கு பல்வேறு போராட்டங்களும், வன்முறைகளும் இடம்பெற்று வருகின்ற நிலையில், போரட்டத்தில் கலந்து கொண்டு பொலிஸாரை தாக்கிய குத்துச் சண்டை வீரர் கிறிஸ்டோப் (Christophe Dettinger), தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொலிஸாரிடம் சரணடைந்துள்ளார்.

அண்மைக் காலமாக பெற்றோல் மற்றும் டீசல் என்பவற்றின் விலை உயர்வுக்கு எதிராக குறித்த போராட்டங்கள் இடம்பெற்று வந்தது எனினும் இப்போராட்டம் 2 வாரங்களாக ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் வலுப் பெற்றுள்ளது.

இந் நிலையில் போராட்டக்காரர்கள் வாகனங்களுக்கு தீ வைத்து எரித்ததால் பொலிஸார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி அவர்களை விரட்டி அடித்தனர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

அப்போது அந்நாட்டின் முன்னாள் குத்துச்சண்டை சாம்பியனான Christophe Dettinger என்பவர் பொலிஸாரை சரமாரியாக குத்தினார்.

இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியதும் அவர், தன்னுடைய செயலுக்கு வருத்தம் தெரிவித்து பொலிஸிலில் சரணடைந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

Related posts: