பிரான்ஸில் பிளாஸ்டிக் கோப்பைக்கு தடை!

Wednesday, September 21st, 2016

பிரான்ஸ் பயன்படுத்திவிட்டு அகற்றும் பிளாஸ்டிக் கோப்பை மற்றும் தட்டுகளுக்கு தடை விதித்துள்ளது.

பிரான்ஸின் புதிய சட்டத்தின்படி அனைத்து மேசை பாத்திரங்களும் 2020 ஜனவரி தொடக்கம் 50 வீதம் உயிரியல் ரீதியான ஆதாரங்களைக் கொண்ட உற்பத்திகளாக இருக்க கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதுவே 2025 ஆம் ஆண்டில் 60 வீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பிரான்ஸில் ஒவ்வொரு விநாடியிலும் 150 பிளாஸ்டிக் கோப்பைகள் பயன்படுத்தப்பட்டு எறியப்படுகின்றன. அதுவே ஆண்டுக்கு 4.73 பில்லியன் பிளாஸ்டிக் கோப்பைகள் எறியப்படுகின்றன. எனினும் இவ்வாறு எறியப்படுபவைகளில் ஒரு வீதம் மாத்திரமே மறுசுழற்சி செய்யப்படுவதாக பிரான்ஸ் சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

எனினும் ஐரோப்பாவின் மிகப்பெரிய பிளாஸ்டிக் பாத்திர உற்பத்தி நிறுவனமான பெக்டுகோ, பிரான்ஸின் இந்த தடைக்கு எதிராக தொடர்ந்து போராடப் போவதாக குறிப்பிட்டுள்ளது. இந்த தடை ஏனைய நாடுகளுக்கு பரவும் வாய்ப்பு குறித்து அது அச்சம் வெளியிட்டுள்ளது.

coltkn-09-21-fr-02153626666_4784889_20092016_mss_cmy

Related posts: