பிரான்ஸ் தேவாலயத்தில் பலர் பணயக்கைதிகளாக தடுத்தவைப்பு!
Tuesday, July 26th, 2016
வடக்கு பிரான்ஸில தேவாலயம் ஒன்றில் மக்களை பிடித்து பணயமாக வைத்திருந்த இரு ஆயுததாரிகள் கொல்லப்பட்டனர் என செய்திகள் கூறுகின்றன.
4 முதல் 6 பேர் வரை இவர்களால் பிடித்து அங்கிருந்த தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்ததாக கூறப்படுகின்றது. ஒரு மதகுரு, இரு சகோதரிகள் மற்றும் தேவாலயத்துக்கு வந்தவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் செய்திகள் தெரிவித்துள்ளன. மேலும் அங்கு பல துப்பாக்கி வேட்டுச் சத்தம் கேட்டதாகவும் போலிஸாரும், அவசர உதவி சேவைகளும் அங்கு வந்து சேர்ந்துள்ளதாகவும் செய்திகள் மேலும் தெிவிக்கின்றன.
Related posts:
பறவைக்காச்சல் தாக்கம்: சிக்கலில் உலகின் இரண்டாவது விவசாய ஏற்றுமதி நாடு!
கொரோனாவால் நிதி நெருக்கடி: மத குருக்களுக்கு சம்பள நிறுத்தம் - போப்பாண்டவர் உத்தரவு!
சிங்கப்பூரில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று - முகக்கவசங்களை அணியுமாறு சுகாதார தரப்பினர் அறிவுற...
|
|
|


