பிரான்ஸில் ஓய்வூதிய திட்டத்திற்கு எதிரான போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது!

Wednesday, March 29th, 2023

பிரான்ஸில், அரசாங்கத்தின் ஓய்வூதியத் திட்டத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் மேலும் தீவிரமடைந்துள்ளது.

தொழிலாளர்கள் ஓய்வுபெறும் வயதெல்லையை, 60 இல் இருந்து 62 ஆக உயர்த்துவதற்கு, ப்ரான்ஸ் ஜனாதிபதி, இம்மானுவேல் மெக்ரோன் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த ஜனவரி மாதம் நடுப்பகுதிமுதல் பிரான்ஸில்  போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், நேற்றையதினமும் இடம்பெற்ற போராட்டங்களில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த வாரம் இடம்பெற்ற போராட்டத்தின்போது, பாதுகாப்புத் தரப்பினருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் இடையே மோதல் நிலை ஏற்பட்டது.

இதன்காரணமாக, நாட்டின் முக்கியமான பகுதிகளில், 13 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், நேற்றையதினம் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் காவல்துறையினருக்கும், இடையே மோதல் நிலை ஏற்பட்டுள்ளது. இதன்போது, 27 பேர் கைதுசெய்யப்பட்டதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

000

Related posts: