காஷ்மீர் பாகிஸ்தானாக உருவாகும் நாளுக்காக காத்திருக்கிறோம் – நவாஸ் செரீப் !

Saturday, July 23rd, 2016

ஆக்கிரமிப்பு காஷ்மீர் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் (என்) கட்சி வெற்றிப்பெற்றதை தொடர்ந்து ’காஷ்மீர் பாகிஸ்தானாக உருவாகும் நாளுக்காக காத்திருக்கிறோம்’ என்று நவாஸ் செரீப் கூறியுள்ளார்.

காஷ்மீரில் பாதுகாப்பு படையினருடன் நடந்த மோதலில், ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானி சுட்டுக்கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அங்கு பெரிய அளவில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறின. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் லாகூரில் கடந்த 15–ந் தேதி மந்திரிசபையை கூட்டி, சுட்டுக்கொல்லப்பட்ட ஹிஸ்புல் முஜாகிதீன் இயக்க தளபதி பர்கான் வானியை சுதந்திர போராட்ட தியாகி என வர்ணித்தார். அவர் கொல்லப்பட்டதை கண்டித்து பாகிஸ்தானில் 20–ந் திகதி கறுப்பு தினம் கடைப்பிடிக்கப்போவதாகவும் மந்திரிசபை முடிவு எடுத்து அறிவித்தது. அதன்படி கறுப்புதினம் அனுசரிக்கப்பட்டது.

இந்தியா கடும் கண்டனம் தெரிவித்தது. உள்நாட்டில் ராணுவப் புரட்சிக்கு அழைப்பு என பல்வேறு பிரச்சனைக்கு மத்தியில் காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச பிரச்சனையாக பாகிஸ்தான் முயற்சி செய்தது. நவாஸ் ஷெரீப் தொடர்ச்சியாக மந்திரி சபை கூட்டத்தையும், ராணுவ அதிகாரிகள் கூட்டத்தையும் கூட்டினார்.

இந்நிலையில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் தேர்தல் நடத்தப்பட்டது. தேர்தலில் நவாஸ் செரீப்பின் கட்சியான பாகிஸ்தான் முஸ்லீம் லீக் வெற்றிப் பெற்றதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறிஉள்ளன. மொத்தம் உள்ள 41 தொகுதிகளில் 33 தொகுதிகளை அக்கட்சி கைப்பற்றியதாக அத்தகவல்கள் கூறிஉள்ளன. இந்நிலையில் கட்சியின் வெற்றியை கொண்டாடும் விதமாக தொண்டர்கள் மத்தியில் பேசிய நவாஸ் செரீப் ’காஷ்மீர் பாகிஸ்தானாக உருவாகும் நாளுக்காக காத்திருக்கிறோம்’ ஆக்கிரமிப்பு காஷ்மீர் வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்ததாக டான் இணையதளம் செய்தி வெளியிட்டு உள்ளது.

காஷ்மீரில் சுதந்திர போராட்டத்தில் உயிரிழந்தவர்களை மறக்க கூடாது என்று செரீப் பேசிஉள்ளார். நவாஸ் செரீப் இதய ஆப்ரேஷன் செய்துவிட்டு பாகிஸ்தான் வந்தபின்னர் பொதுகூட்டத்தில் பேசிய பேச்சு இதுவாகும்.

Related posts: