வடகொரியாவுக்கு உதவுவது யார்?  

Wednesday, September 20th, 2017

வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு உதவி செய்பவர்கள் கண்டறியப்பட வேண்டும் என்று இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மாஸ்வராஜ் வலியுறுத்தியுள்ளார்.

வடகொரியா தொடர்ந்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகனை சோதனைகளை மேற்கொண்டு வருகிறது. சமீபத்தில் மேற்கொண்ட ஏவுகணை சோதனை கூட ஜப்பானை நோக்கி நடத்தப்பட்டதால், அமெரிக்கா உட்பட பல்வேறு நாடுகள் வடகொரியாவின் செயலுக்கு கண்டனம் தெரிவித்தன.அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் வடகொரியாவை ஒட்டு மொத்தமாக அழித்துவிடுவோம் என்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.

வடகொரியாவுக்கு பாகிஸ்தான் அணு ஆயுத தொழில் நுட்பங்களை பகிர்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், இது தொடர்பான தகவல்களை பாகிஸ்தான் அணு விஞ்ஞானிகளான அப்துல் காதிர்கான், பெர்வேஸ் ஹூத் போய் ஆகியோரும் வெளியிட்டனர்.இதையடுத்து நியூயார்க்கில் அமெரிக்கா மற்றும் ஜப்பான் வெளியுறவு அமைச்சர்களுடனான கூட்டத்தில் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார்.அப்போது அவர் பாகிஸ்தானின் பெயரைக் குறிப்பிடாமல் வடகொரியாவின் அணு ஆயுத சோதனையுடன் தொடர்புடையவர்கள் கண்டறியப்பட வேண்டும் என்றும் அவர்கள் வடகொரியாவின் அணு ஆயுத சோதனைக்கு கண்டிப்பாக பொறுப்பாக்கப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related posts: