பிரான்சில் குண்டுவெடிப்பு!

பிரான்ஸ் நாட்டின் லியோனில் நகர தெரு ஒன்றில் திருகுகள் மற்றும் கற்கள் ஆகியவற்றால் நிரப்பப்பட்ட ‘பார்சல் வெடிகுண்டு’ தாக்குதலில் குறைந்தபட்சம் 13 பேர் காயமடைந்திருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தென்கிழக்கு பிரான்ஸின் லியோனின் பகுதியில் பாதசாரிகள் நடமாட்டம் இருந்த தெரு ஒன்றில் பார்சல் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதில் 8 வயது சிறுமி உட்பட, குறைந்தபட்சம் 13 பாதசாரிகள் காயங்களுடன் தப்பியிருப்பதாகவும், உயிருக்கு ஆபத்தான காயங்கள் யாருக்கும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Related posts:
கொங்ஹொங்கில் குழாய் வீட்டுத் திட்டம்!
ரூ.70 கோடி மோசடி செய்த இந்தியர்: 13 ஆண்டு சிறை தண்டனை!
பிரித்தானியா எண்ணெய் கப்பலை ஆயுதங்களுடன் சுற்றி வளைத்த ஈரான்!
|
|