பிரான்சில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரம் ஆரம்பம்!
Thursday, September 22nd, 2016
அடுத்த ஆண்டு நடக்கவுள்ள பிரான்ஸ் அதிபர் தேர்தலில் வேட்பாளராக போட்டியிடுவதற்கான பிரசாரம் அதிகாரப்பூரமாக ஆரம்பிக்கப்பட்டள்ளதாகவும். இதில் ஏழு பேர் போட்டியிடுகின்றனர் எனவும் செய்திகள் தெரிவிக்கின்றன..
இந்த போட்டியில், முன்னணியில் உள்ளவர் முன்னாள் பிரதமரான 71 வயதான அலன் ஜூப்பே. 2004ல், கட்சி நிதி ஊழல் தொடர்பாக தண்டிக்கப்பட்ட அவர் ஓர் ஆண்டுக்கு பொது பதவி வகிக்க தடை விதிக்கப்பட்டது.
முன்னாள் அதிபர் நிக்கோலா சர்கோஸி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். இந்த போட்டியில் உள்ள ஒரே பெண் வேட்பாளர் நத்தலி கோசியுஸ்கோ மோரிசேத். இவர் சர்கோஸியின் முன்னாள் செய்தி தொடர்பாளர்.

Related posts:
தாய்லாந்தில் புதிய அரசியல் சாசன அறிமுகம்!
ரஷ்ய ராஜதந்திரிகள் வெளியேற்றம்!
ஜோர்ஜ்.எச் புஷ் மீண்டும் மருத்துவனையில்!
|
|
|


