பிரஸ்சல்ஸ் குண்டுவெடிப்பு எதிரொலி: பாரீஸ் பாதுகாப்பு அதிகரிப்பு!
Wednesday, March 23rd, 2016
பெல்ஜியம் தலைநகரான பிரஸ்சல்ஸில் குண்டுவெடிப்பு நிகழ்ந்துள்ள நிலையில் பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பாதுகாப்பு பல மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது.
பிரஸ்சல்ஸில் உள்ள Zaventem விமான நிலையம், Maalbeek மற்றும் Schuman ஆகிய இரு ரயில் நிலையங்களில் சில மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்தடுத்து 3 வெடிகுண்டு தாக்குதல்கள் நிகழ்ந்ததில் 32 பேர் பலியானதுடன் பலர் படுகாயமடைந்துள்ளனர்.
இந்த வெடிகுண்டு தாக்குதல் சம்பவம் வெளியானதை தொடர்ந்து பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. பிரஸ்சல்ஸ் நகரில் தாக்குதல் நடந்த சில நிமிடங்களில் பிரான்ஸ் ஜனாதிபதி நாட்டின் பிரதமர் உள்துறை அமைச்சர் மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை அழைத்து உடனடி ஆலோசனை மேற்கொண்டார். இந்த ஆலோசனைக்கு பிறகு பாரீஸில் பாதுகாப்பில் உள்ள பொலிசாரை விட கூடுதலாக 1,600 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக மக்கள் அதிகமாக கூடும் விமான நிலையங்கள், ரயில் மற்றும் பேருந்து நிலையங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளன.
பாரீஸின் மிகப்பெரிய விமான நிலையமான Charles de Gaulle என்ற இடத்தில் கூடுதலாக 40 பொலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.மேலும், தகுந்த பயணச்சீட்டு இல்லாமல் வரும் நபர்களை ரயில் நிலையங்களில் அனுமதிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
பாரீஸில் நவம்பர் மாதம் நடந்த தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய முக்கிய தீவிரவாதி பிரஸ்சல்ஸ் பொலிசாரால் கைது செய்யப்பட்டதை தொடர்ந்து இந்த தாக்குதல்கள் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது
Related posts:
|
|
|


