பிரஸல்ஸ் தாக்குதலில் தமிழகத்தைச் சேர்ந்தவர் உயிரிழந்துள்ளது உறுதியானது!

பிரஸல்லில் கடத்த வாரம் இடம்பெற்ற தொடர் குண்டுத் தாக்குதலின்போது காணாமல்போனதாகக் கூறப்படும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ராகவேந்திரன் கணேசன் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் உறுதி செய்துள்ளனர். அவரை நினைவில் கொண்டு அவருக்கான பிரார்த்தனை செய்வதாகவும் இன்ஃபோசிஸ் கூறியுள்ளது.
அவர் தாக்குதலில் உயிரிழந்துள்ளார் என்பதை பெல்ஜியத்துக்கான இந்தியத் தூதரும் தெரிவித்துள்ளார். அவரது உடல் மால்பீக் ரயில் நிலையத்தில் கண்டெடுக்கப்பட்டதாக பெல்ஜிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தத் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்களில் அவரது உடலும் இருந்தது இன்று கண்டுபிடிக்கப்பட்டது எனவும் பெல்ஜிய அதிகாரிகள் கூறியதாகவும் இந்தியத் தூதர் மஞ்சீவ் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
காலஞ்சென்ற ராகவேந்திரன் கணேசனின் உடல் ஆம்ஸ்டர்டாம் வழியாக இந்தியாவுக்கு திருப்பி அனுப்பிவைக்கப்படும் என இந்தியத் தூதரம் தெரிவித்துள்ளது
Related posts:
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் குண்டு வீச்சு 96 சிறுவர்கள் பலி!
1000 கோடி ரூபாவினால் அதிகரித்துள்ள நிதி ஒதுக்கீடு !
இலங்கை - நியூசிலாந்து டெஸ்ட் தொடர் 4 ஆம் நாள் ஆட்டம் நிறைவு : ஒரு விக்கெட்டை இழந்தது நியூசிலாந்து!
|
|