லிபிய கடற்பகுதியில் தத்தளித்த சுமார் 970 அகதிகள் மீட்பு!

Sunday, March 5th, 2017

லிபிய கடற்பகுதியில் தத்தளித்த சுமார் 970 அகதிகளை மீட்டுள்ளதாக இத்தாலி கடலோர காவற்துறை தெரிவித்துள்ளது. உள்நாட்டுப் போரால் மிகவும் பாதிக்கப்பட்டவர்கள் லிபியாவிலிருந்து மத்தியதரைக் கடல் பகுதி வழியாக ஐரோப்பாவுக்கு அகதிகளாகச் செல்கின்றமை அதிகரித்து வருகிறது.

இந்த ஆண்டில் இதுவரை 13 ஆயிரத்து 400 பேர் ஐரோப்பாவுக்குச் செல்லும் நோக்கில் இத்தாலி கடற்பகுதிக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2015 மற்றும் 2016 ஆண்டுடன் ஒப்பிடுகையில் அகதிகளாக வருவோர் எண்ணிக்கை 50 முதல் 70 சதவீதம் வரை அதிகரித்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நிலையில், அகதிகளின் வருகையைக் கட்டுப்படுத்த ஐரோப்பிய நாடுகள் தீவிரமாகப் பரிசீலித்து வருகின்றாகவும் தெரிவிக்கப்படுகின்றது

Related posts: