பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை… !

Wednesday, July 24th, 2019

ஜம்மு – காஷ்மீர் விடயத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை மத்தியஸ்த்தம் வகிக்குமாறு, இந்திய பிரதமர் நரேந்திரமோடி கோரவில்லை என இந்திய வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.

பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான் நேற்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை சந்தித்த போது, இந்திய பிரதமரின் கோரிக்கைக்கு அமைய தாம் பாகிஸ்தானுக்கும் இந்தியாவிற்கும் இடையிலான காஷ்மீர் விவகாரத்தில் அமைதியை ஏற்படுத்த மத்தியஸ்த்தம் வகிக்க தயாராக இருப்பதாக கூறினார்.

இரண்டு வாரங்களுக்கு முன்னர் பிரதமர் மோடியுடன் இதுகுறித்து கலந்துரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். எனினும் இதனை இந்திய வெளிவிவகார அமைச்சு மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts: