பிரதமர் டேவிட் கமரனுக்கு புதிய பதவி!

Thursday, October 13th, 2016

அரசியல் வாழ்க்கையிலிருந்து முற்றாக ஓய்வு பெற்றுள்ள பிரித்தானியாவின் முன்னாள் பிரதமர் டேவிட் கமரன் தற்போது இளைஞர்கள் தேசிய குடியுரிமை சேவை விரிவாக்கத்திற்கு தலைமை தாங்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

தேசிய குடியுரிமை சேவை அமைப்பானது, சமூக அபிவிருத்தித் திட்டங்களுக்கு இளைஞர்களை தயார்படுத்துதலை நோக்கமாக கொண்டு இயங்குகின்றது.

இந்த அமைப்பில் 15 முதல் 17 வயதுக்கு உட்பட்டவர்களே சேர்த்துக் கொள்ளப்படுகின்றனர். இந்நிறுவனத்தின் தலைமைப் பதவியை டேவிட் கமரன் ஏற்றுக் கொளளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து உள்ளூர் பத்திரிகை ஒன்றிற்கு டேவிட் கமரன் வழங்கிய செய்திக் கட்டுரையில், தேசிய குடியுரிமை சேவை அமைப்பானது தன்னுடைய சேவை பெருமை மிக்க சாதனைகளில் ஒன்று என தெரிவித்துள்ளார்.

மேலும் சமூக பேதங்களை கடந்து இணைப்புக்களை ஏற்படுத்துவது இளம் வயதினரிடையே வாழ்க்கை முழுவதும் நட்புறவை ஏற்படுத்தும் என்பதுடன் சுய நம்பிக்கை, பின்னடைவுகளை சமாளித்தல், படைப்பாற்றல் போன்ற மென்மையான திறன்களை வளர்த்து அவர்களுடைய வாழ்க்கையில் உதவ முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகுவதான தீர்மானத்தினை தொடர்ந்து பிரதமர் பதவியை ராஜினாமா செய்துகொண்ட டேவிட் கமரன், கடந்த மாதம் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியையும் ராஜினாமா செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

david-cameron

Related posts: