பிரசண்தா நேபாளத்தின் 39-வது பிரதமர் ஆகிறார்?

Wednesday, August 3rd, 2016

நேபாள கம்யூனிஸ்ட் மாவோயிஸ்ட் சென்டர் கட்சித்தலைவர் பிரசண்டா நேபாளத்தின் அடுத்த பிரதமராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நேபாள பிரதமராக  கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த கே.பி.ஒலி பதவி வகித்து வந்தார். இந்நிலையில் அவர் கடந்த மாதம் 24-ம் தேதி பதவி விலகினார். இதையடுத்து புதிய பிரதமரை விரைவில் தேர்வு செய்ய வேண்டும் என அதிபர்  பித்யா தேவி பண்டாரி அழைப்பு விடுத்திருந்தார்.

இந்நிலையில் பிரதமர் பதவிக்கான வேட்புமனுவை நாடாளுமன்ற செயலகத்தில்  பிரசண்டா செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தார். பிரசண்டாவின் வேட்புமனுவை நேபாள காங்கிரஸ் கட்சித் தலைவர் ஷேர் பகதூர் தேவுபா முன்மொழிவதாக அறிவித்தார். பிரண்டாவின் கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் கிருஷ்ண பகதூர் மஹாரா மனுவை வழிமொழிந்தார்.

பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கான நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் குறித்த அறிவிக்கையை அவைத்தலைவர் ஓம்சாரி கர்த்தி செவ்வாய்க்கிழமை வெளியிட்டார்.596 எம்பிக்களை கொண்ட பாராளுமன்ற கூட்டத்தை சபாநாயகர் அன்சாரி கார்த்தி கூட்டுகிறார்.  இவருக்கு 3 மாதேசி  தலைவர்களான உபேந்திர யாதவ், சர்வேந்திரா நாத் சுக்லா மற்றும் லட்சுமண் லால் கர்ணா ஆகியோர் தங்களது ஆதரவை தெரிவித்துள்ளனர். இந்த 3 மாதேசி கூட்டணியின் 39 எம்பிக்கள் ஆதரவுடன் பிரசந்தா பிரதமராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது. இதற்கு முன்னர் 2008-ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் 2009-ஆம் ஆண்டு மே வரை அந்நாட்டின் பிரதமராகப் பதவி வகித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: