பிஜி தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்!
Monday, November 19th, 2018
தென் பசுபிக் கடலில் உள்ள பிஜி தீவில் நேற்று கடும் நில நடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவுகோலில் இந்த நில நடுக்கம் 6.7 புள்ளிகளாக பதிவானதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
தலைநகர் சுவாவுக்கு கிழக்கே 283 கி.மீட்டர் தொலைவில் பூமிக்கு அடியில் 534 கி.மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவாகியுள்ளது.
மிக அதிக ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதால் பூமி குலுங்கியதை தங்களால் பெருமளவு உணர முடியவில்லை என பொதுமக்கள் தெரிவித்தனர். மேலும் உயிர் சேதம், பொருட் சேதம் எதுவும் ஏற்படவில்லை. சுனாமி எச்சரிக்கையும் விடுக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related posts:
போர் பிரகடனம் முடிவுக்கு கொண்டுவரப்படுவதாக அறிவித்தது ஈராக்!
ப்ரெக்ஸிட் ஒப்பந்தம்: இம்மாத இறுதிக்குள் முடிவு!
இந்தியாவிலும் கொரோனா நோய் தொற்றாளர்...!
|
|
|


