பாரீஸ் விமான நிலையத்தில் போலி துப்பாக்கியுடன் இருவர் கைது!

பிரான்ஸ் தலைநகர் பாரீஸிலுள்ள விமான நிலையத்தில் போலி துப்பாக்கியுடன் வந்த இருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
விமான நிலையத்தின் 2-ஆவது முனையத்தில் 2 பேர் துப்பாக்கியுடன் வருவதாகக் கூறி, பயணிகள் கூச்சலிட்டனர். இதையடுத்து, அங்கிருந்த பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். அந்த 2 பேரையும் விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர்.
அவர்கள் வைத்திருந்த துப்பாக்கிகள் போலியானவை என்பது சோதனையில் தெரியவந்தது.
இதேவேளை, விமான நிலையத்தில் தனியாக இருந்த பையையும் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை செய்தனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
Related posts:
இது எனது இறுதி உரையாகக்கூட இருக்கலாம்’ – பிடெல் கெஸ்ட்ரோ!
நவாஸ் ஷெரீப்க்கு அழைப்பாணை!
கியூபா வரும் ரஷ்ய போர் கப்பல்கள் - உஷார் நிலையில் அமெரிக்கா!
|
|