பாரிய தீ விபத்து – 7 பேர் உயிரிழப்பு!
Saturday, February 23rd, 2019
இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் இடம்பெற்ற தீ விபத்தில், 4 குழந்தைகள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட 7 பேர் உயிரிழந்தனர்.
மேற்கு வங்க மாநில புருலியா மாவட்டம் மகாதெப்பூர் கிராமத்தில் பனை ஓலைகள், தார்ப்பாய், மரக்கிளைகள் மூலம் கூடாரம் அமைத்து பனைத்தொழிலாளர் குடும்பத்தினர் தங்கி இருந்துள்ளனர்.
இந்த நிலையில், நேற்றைய தினம், குறித்த கூடாரத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்துக்கான காரணம் கண்டறியப்படாத நிலையில், விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
Related posts:
வர்த்தக முதலீட்டு உறவுகளை விஸ்தரிக்க இலங்கை - தாய்லாந்து இடையே நடவடிக்கை!
ரஷ்யாவிற்கு விஜயம் செய்யவுள்ள இந்திய பிரதமர்!
சூடான் மோதல் - யுனிசெஃப் ஆதங்கம்!
|
|
|


