வர்த்தக முதலீட்டு உறவுகளை விஸ்தரிக்க இலங்கை – தாய்லாந்து இடையே நடவடிக்கை!

Wednesday, February 22nd, 2017

இலங்கை மற்றும் தாய்லாந்துக்கு இடையிலான இருதரப்பு வர்த்தக முதலீட்டு உறவுகளை விஸ்தரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக என்று தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கையின் ஒரு அங்கமாக இது அமுலாகவிருக்கிறது. தாய்லாந்து சென்றுள்ள அமைச்சர் மலிக் சமரவிக்ரம இதுபற்றி தாய்லாந்தின் உயர்மட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.

தாய்லாந்தின் பிரதிப் பிரதமர், வர்த்தக அமைச்சர் ஆகியோரையும் அவர் சந்தித்துள்ளார். இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு, மூலோபாய அபிவிருத்தி என்பனவற்றை கூட்டாக மேம்படுத்துவது அவசியம் என்று தாய்லாந்தின் பிரதிப் பிரதமர் இதன்போது தெரிவித்தார்.

விவசாயம், ஆபரண உற்பத்தி, இலத்திரனியல் பொருட்கள், இறப்பர், மோட்டார் வாகன உதிரிப்பாகங்கள், உணவுத் தயாரிப்பு, கைத்தொழில் பூங்கா, சுற்றுலா ஆகிய துறைகள் மீது கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அமைச்சர் மலிக் சமரவிக்ரம சுட்டிக்காட்டினார்.

இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தக உறவுகளின் பெறுமதி எதிர்வரும் மூன்று ஆண்டுகளில் 150 கோடி அமெரிக்க டொலர்கள் வரை அதிகரிக்கப்படவிருக்கின்றன.நேரடி வெளிநாட்டு உதவிகளை வினைத்திறனாக மாற்றும் நோக்குடன் உரிய சட்ட ஏற்பாடுகள் திருத்தப்படும் என்றும் அமைச்சர் சமரவிக்ரம மேலும் கூறினார்.

20150924_Thai_Vice_Premier3_article_main_image

Related posts: