பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐ. நா.சபை அறிவிப்பு!
Sunday, May 12th, 2024
ஆப்கானிஸ்தானின் வடக்கு பாக்லான் மாகாணத்தில் வெள்ளப் பெருக்கினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 300ஆக உயர்ந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
வெள்ளப் பெருக்கின் காரணமாக ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் சேதமடைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.
கடந்த சில வாரங்களாக வழக்கத்திற்கு மாறாக ஏற்பட்ட மழைவீழ்ச்சியினால் பாரிய வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெள்ளப் பெருக்கினால் மேலும் பலர் காணாமல் போயுள்ளமையினால் பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
உள்ளூர் மீட்புப் பணிகளுக்கு உதவியாக இராணுவ உலங்கு வானூர்திகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
000
Related posts:
அமலுக்கு வந்தது சிரியாவில் போர் நிறுத்தம் !
பிரான்சில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தவர் சுட்டுக்கொலை!
ரஷ்யா விரைவில் மீண்டும் தாக்குதலை தொடங்கலாம் - உக்ரைன் பாதுகாப்பு படை எச்சரிக்கை!
|
|
|


