பிரான்சில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்தவர் சுட்டுக்கொலை!

Saturday, March 24th, 2018

பிரான்சின் தென் பகுதியான ரிபெஸ் நகரில் உள்ள பல்பொருள் அங்காடியில் பொது மக்களை பிணைக்கைதிகளாக பிடித்திருந்த ஒருவரை காவல்துறையினர் சுட்டுக்கொன்றுள்ளனர்.

மொரக்கோ நாட்டைச் சேர்ந்த இவர்  மூன்று பொது மக்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்தத் தாக்குதலில், காவல்துறை அதிகாரி உட்பட 16 பேர் காயமடைந்துள்ளனர். ஐ.எஸ்.ஐ.எஸ். ஆயுத குழுவை சேர்ந்தவர் என நம்பப்படும் இவர் சிறையடைக்கப்பட்டுள்ள சலா அப்டீஸ்லம் என்ற தீவிரவாதியினை விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.

கடந்த 2015 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 13 ஆம் திகதி பிரான்ஸ் தலைநகர் பாரிசில் இடம்பெற்ற பாரிய தாக்குதலின் போது 130 பொது மக்கள் கொல்லப்பட்டனர். அதன் முக்கிய சூத்திரதாரியே சிறையடைக்கப்பட்டுள்ளவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: