பாகிஸ்தான் பிரதமரை விலைக்கு வாங்க தயாரா?: ‘eBay’ தளத்தில் ஏலம்!

Friday, April 15th, 2016

பாகிஸ்தான் பிரதமரான நவாஸ் ஷெரீப்பை ‘eBay’ என்ற வணிக இணையத்தளத்தில் நபர் ஒருவர் 62 லட்சத்துக்கு ஏலம் விட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

’பிரதமர் பதவிக்கு தகுதியில்லாதவர்’ என்ற தலைப்புடன் நவாஸ் ஷெரீப்பின் புகைப்படத்துடன் இந்த விளம்பரம் eBay தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

’பயன்படுத்தப்பட்ட பாகிஸ்தான் பிரதமர் தற்போது விற்பனைக்கு உள்ளார். இனிமேல் இவர் பிரதமர் பதவியில் நீடிக்க தேவையில்லை.

இவரை வாங்க நினைப்பவர்கள் அவர்களே நேரடியாக வந்து மத்திய லண்டன் பகுதியில் இருந்து அழைத்துச் செல்ல வேண்டும்.

பிரதமர் விற்பனை ஆனப் பிறகு அவர் எங்கு இருக்கிறார் என்ற முகவரி அளிக்கப்படும். பிரதமரை அழைத்துச் செல்லும் பயணச் செலவை வாங்குபவரே ஏற்க வேண்டும்.

பிரதமர் தற்போது வேலை செய்யும் நிலையில் இல்லை(Not in working condition). இதற்கு முன்னாலும் வேலை செய்யவில்லை. பிரதமர் பிறந்தது முதல் இப்போது வரை தவறு செய்துக்கொண்டும் ஊழலில் ஈடுப்பட்டுக்கொண்டும் இருக்கிறார்.

பிரதமரை விலை வாங்கும் நபருக்கு பாகிஸ்தானில் உள்ள பஞ்சாப் மாநிலத்தின் முதல்வரான Shahbaz Sharif என்பவரை இலவச இணைப்பாக வழங்கப்படும்.

இவர்கள் இருவரும் பாகிஸ்தான் நாட்டை தவிர இங்கிலாந்து, அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட பிற நாடுகளில் தான் அடிக்கடி இருப்பார்கள்.

பிரதமரின் சொத்துக்கள், குடும்பம் என அனைத்தும் லண்டனில் தான் உள்ளது. ஆனால், அவர் பாகிஸ்தானில் மீண்டும் பிரதமராக துடிக்கிறார்.

இப்போது பிரதமர் நவாஸ் ஷெரீப் லண்டன் நகரில் தான் இருக்கிறார். விலைக்கு வாங்க நினைப்பவர்கள் சீக்கரம் முந்துங்கள்’ என்பதுடன் அந்த விளம்பரத்திற்கான விளக்கம் முடிகிறது.

வணிக இணையத்தளமான eBay’-ல் பாகிஸ்தான் பிரதமரை ஏலம் விடப்பட்டுள்ள இந்த சம்பவம் இணையத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related posts: