செய்தி இணையங்கள் முடக்கம்- சீனா நடவடிக்கை!

Tuesday, July 26th, 2016

அரசியல் மற்றும் சமூக நிகழ்வுகளின் செய்தி வழங்குதலை கட்டுப்படுத்தும் சமீப முயற்சியின் ஒரு பங்காக, பல இணைய செய்தி நிறுவனங்களின் சேவைகளை சீன அரசு மூடியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன..

பெய்ஜிங்கின் இணைய கட்டுப்பாட்டுத்துறை, சீனாவின் பெரிய இணைய செய்தி நிறுவனங்களான சீன, சொகு, நெட் ஈஸ் மற்றும் ஐ பெங் ஆகிய வலைத்தளங்கள், அதிகாரப்பூர்வ அரசு அறிக்கையை பிரசுரிப்பதற்கு பதிலாக தங்களது செய்திகளை வெளியிட்டதால் இம்மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.பல வருடங்களுக்கு முன்னர், சீனா அதிபர் ஷி ஜின்பிங் அதிககாரத்திற்கு வந்ததற்கு பிறகு, ஆளும் கம்யூனிஸ்ட் கட்சி நாட்டினுள் நடைபெறும் எல்லாவித தொடர்புகளுக்கும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts: