பாகிஸ்தான் சிறுவன் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை!
Tuesday, October 4th, 2016
உரி தாக்குதலை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே கிட்டதட்ட போர் சுழல் ஏற்பட்டுள்ளது.இந்நிலையில், சர்வதேச எல்லையில் ஆடுமாடு மேய்த்துக்கு கொண்டிருந்த பாகிஸ்தான் சிறுவன் தன்வீர், கிணற்றில் தண்ணீர் குடிப்பதற்காக சர்வதேச எல்லையை தாண்டி இந்தியாவிற்குள் நுழைந்துள்ளார்.
அவரை பிடித்த இந்திய இராணுவத்தினர், மனிதாபிமான அடிப்படையில் பாகிஸ்தான் இராணுவ அதிகாரிகளை தொடர்பு கொண்டு சிறுவனை ஒப்படைத்துள்ளனர். உரி தாக்குதலை தொடர்ந்து பாகிஸ்தான் ஆக்ரமிப்பு பகுதியின் மீது இந்திய நடத்திய வியூகத் தாக்குதலின் போது இந்திய வீரர் சந்து பாபுலால் சவுகான் பாகிஸ்தானில் சிக்கிக்கொண்டார். தற்போது, 22 வயதான சந்து பாபுலால் சவுகான்னை மீட்க தீவிர முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related posts:
காசா சுரங்க பாதையில் எகிப்து நீரை நிரப்பியதால் நால்வர் பலி!
கடத்தலில் ஈடுபட்டால் மரணதண்டனை- இந்தியாவில் புதிய சட்டம்!
அமெரிக்காவில் உள்நாட்டு போர் ஏற்பட்டால் உலகுக்கு நன்மை - செர்ஜி மார்கோவ் தெரிவிப்பு!
|
|
|


