காசா சுரங்க பாதையில் எகிப்து நீரை நிரப்பியதால் நால்வர் பலி!

Wednesday, December 7th, 2016

காசா மற்றும் எகிப்தை இணைக்கும் சுரங்கப்பாதை மீது எகிப்து நிர்வாகம் வேண்டுமென்று கடல் நீரை நிரப்பியதால் அதில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளனர்.

இடிந்து விழுந்த சுரங்கப்பாதையில் இருந்து முன்று சடலங்களை மீட்டிருக்கும் அவசர பிரிவினர் மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.

இஸ்ரேலின் முற்றுகையில் இருக்கும் காசாவுக்கு பொருட்களை கடத்தி வருவதற்கு பயன்படும் இந்த சுரங்கப்பாதைகளில் இடம்பெறும் விபத்துகளில் அண்மைக்காலத்தில் பலஸ்தீனர்கள் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். சுரங்கப்பாதையில் ஏற்பட்ட மின்சார கோளாறு காரணமாக கடந்த ஒக்டோபர் பலஸ்தீனர் ஒருவர் பலியானார்.

கடந்த 2007 ஆம் ஆண்டு தொடக்கம் எகிப்தை இணைக்கும் சுரங்கப்பாதைகள் செயற்படுகின்றபோதும் எகிப்து அண்மைக்காலத்தில் அவைகளை மூடுவதற்கு கடுமையான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.

காசாவில் ஆட்சியில் இருக்கும் ஹமாஸ் அமைப்பு இந்த சுரங்கப்பாதைகளை பயன்படுத்தி எகிப்தில் தாக்குதல்களில் ஈடுபடுவதாக எகிப்து நிர்வாகம் குற்றம்சாட்டுகிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில் இவ்வாறான சுரங்கப்பாதைகள் மீது எகிப்து கழிவு நீர் மற்றும் கடல் நீரை நிரப்பி அவைகளை அழித்து வருகிறது.

 coltkn-12-06-fr-03152534606_5075739_05122016_mss_cmy

Related posts: